பாத்திமா றம்ஸியா. வெளியீட்டு விபரம் தரப்படவில்லை. 1வது பதிப்பு, ஜுலை 2008. (நிவ் சாக்கிலா பிரின்டர்ஸ்).
(6), 61 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.
இந்நூலில் பாத்திமா றம்ஸியாவின் பத்துக் கதைகள் இடம்பெற்றுள்ளன. இவை கானல் நீராகிறது காசு, பருவத்தே பயிர் செய், அவன் பார்த்துக்கொள்வான், செல்லாக்காசு, உறவுகள் முள்ளாகின்றபோது, திசை மாறிய பயணம், விரிந்த வானம், கைக்குட்டை, ஒரு நட்சத்திரம் மின்னுகின்றது, புழுதியில் விழுந்த மலர் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217214).