செ.யோகநாதன். சென்னை 600017: அருந்ததி நிலையம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், 1வது பதிப்பு, 2003. (சென்னை 600001: சக்தி பிரின்டர்ஸ்).
272 பக்கம், விலை: இந்திய ரூபா 135., அளவு: 21×14 சமீ.
இலங்கையில், பேராதனையிலிருந்து புதுமைப் பிரசுர வெளியீடாக 1வது பதிப்பினை 1964இல் கண்ட இந்நூல் மேலும் சில கதைகளையும் சேர்த்து அதாவது 1960 முதல் 1980வரை வெளிவந்த கதைகளை உள்ளடக்கியதாக மீளவும் தமிழகத்தில் முதற் பிரசுரமாகின்றது. இதில் யோகநாதன் கதைகள், கண்ணீர் விட்டே வளர்த்தோம் ஆகிய இரு தொகுதிகளிலும் உள்ளடங்கிய யோகநாதனின் சிறுகதைகளைக் காணமுடிகின்றது. கலைஞன், சோளகம், மலரும் செடியும், தாகம், தோழமையென்றொரு சொல், நிறங்கள், நாதங்கள் எத்தனையோ, மூடுதிரை, சொர்க்கபூமியில், அருந்ததி, காதல் பறவை, பசித்திருக்கிறவர்கள், யன்னல், ஊனம், பெறுமதியற்ற ஓவியங்கள், நேற்றைய அடிமைகள், வெடிக்காரன், ஏழை சொல் அம்பலமேறும், புதிய நட்சத்திரம், பட்டிமாடு, கண்ணீர்விட்டே வளர்த்தோம் ஆகிய 21 தலைப்புகளில் இக்கதைகள் இடம்பெற்றுள்ளன.