என்.எஸ்.நடேசன். (இயற்பெயர்: நொயல் எஸ்.நடேசன்). சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, மார்ச் 2007. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை).
136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 81-89748-50-5.
தற்போது அவுஸ்திரேலியாவில் மிருகவைத்தியராகக் கடமையாற்றும் நூலாசிரியர் மிருகவைத்தியத்துறையில் தான் பெற்ற அனுபவங்களை வைத்துப் பின்னப்பட்ட கதைகள் இவை. விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்ட இக்கதைகள் அவுஸ்திரேலியாவில் Tamil News Pte Ltd வெளியிடும் உதயம் என்ற இருமொழி மாதஇதழில் எழுதிவந்த அனுபவம்சார்ந்த கதைகளின் தொகுப்பு. இதில் ஆதிவாசிகளின் அவலம், நினைவுத் தடத்தில், ஜுலியாவின் பார்வையில், போதிமர ஞானம், லோராவின் பொருளாதாரக் கோட்பாடு, கலவியில் விழுப்புண், பொய்சொல்லிக் கசிப்பு, நாய்க்கும் நீரிழிவு வரும், சர்தார்ஜியின் நாய்க்குட்டி, மிஸ்கா என்னைத் தொடர்ந்து வரும், வயிற்றில் மணிக்கயிறு, இருதுளி கண்ணீர், அன்னமிட்ட வெள்ளெலி, இரத்தப் புற்றுநோய், சமூக விரோதியாகிய கார், எதிர்வினை, சுனாமி வைத்தியம், மனைவி மெச்சும் கணவர், துன்பம் ஒரு தொடர்கதை, மெல்பேர்னில் குதிரைப்பந்தயம் ஆகிய 20 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (முதலாவது தொகுதிக்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 3830)