ஆர். எம்.நௌசாத்;. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).
134 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-59-6.
இந்தக் கதைகளின் களம்-ஈழம், தாய்லாந்து, விண்வெளி. காலம்- நேற்று, இன்று, நாளையையும் கடந்து முடிவற்ற காலம். இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக்காகவும் போராடுகிறார்கள். அடயாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. வாழ்வடையாளத்திற்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கின்றது. இந்த மானுடச் சிக்கலை முன்வைப்பவை இக்கதைகள். சுந்தரராமசாமி நினைவு குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற நட்டுமையின் ஆசிரியர் தீரன் ஆர்.எம்.நௌசத்தின் 12 கதைகள் கொண்ட தொகுப்பு இது. இக்கதைகள் தாய்மொழி, வதனமார், வெள்ளிவிரல், விட்டு விடுதலையாகி, வேக்காடு, கல்லடிப் பாலம், மீள்தகவு, காலகட்டம், தலைவர் வந்திருந்தார், நல்லதொரு துரோகம், ஸீனத்தும்மா, சாகும்தலம் ஆகிய தலைப்புகளில் அமைந்தவை. தலைப்புக்கதையான வெள்ளிவிரல், சில ஆசாட பூதிகளின் அசிங்கமான வாழ்வைச் சித்திரிப்பதுடன் மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மக்களையும் படம்பிடித்துக்காட்டுகின்றது. இவர் தனது கதைகளில் கையாண்டுள்ள நவீன உத்திகளும் தேர்ந்தெடுத்த வித்தியாசமான கதைக்களன்களும் பட்டவர்த்தனமான உரையாடல் மொழிகளும் நம்மை அவரது கதைகளோடு ஒன்றிக்க வைக்கின்றன. ஆசிரியர் இலங்கை தபால் திணைக்களத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.