செ.தமிழ்ச் செல்வன். நாவலப்பிட்டி: திருமதி வனஜா தமிழ்ச்செல்வன், 163/21, தெகிந்த வீதி, பவ்வாகம, 1வது பதிப்பு, மார்ச் 2006. (கண்டி: வினோ அச்சகம்).
(4), 120 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-99481-0-5.
மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் தமது பிள்ளைகளைக் கல்விப்புலத்தில் முன்னேற்றவேண்டும் என்ற மாற்றநிலையை உருவாக்கி வளர்க்கப்பட்ட மத்தியதர மலையகச் சமூகத்தைப் பின்புலமாகக் கொண்ட நாவல். அரசாங்க, தனியார்துறை நிறுவனங்களில் தொழில்வாய்ப்பினைப் பெற்று வித்தியாசமான அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் இவர்களின் கதையே இந்நாவலாகின்றது. கனிமொழி என்ற ஆசிரியையின் வாழ்வுக்கூடாக இந்நாவல் பயணிக்கின்றது. கனிமொழி மாணவியாக, ஆசிரியையாக, காதலியாக, மனைவியாக, தாயாக, அதிபராக இருந்து ஓய்வுபெறும்வரை நாவல் நீண்டுசெல்கின்றது. புசல்லாவையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை தமிழ்ச்செல்வன் கணிதபாட ஆசிரியராக நியமனம் பெற்று, அதிபராக உயர்ந்து, உதவிக் கல்விப் பணிப்பாளராக கம்பளை-கண்டி கல்வி வலயத்தில் பணியாற்றுபவர். இந்நூல் மத்திய மாகாண சாகித்திய விழாவில் 2007ம் ஆண்டுக்குரிய விருதினைப் பெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217121).