8656 எழுதாத சரித்திரங்கள்.

தேவகாந்தன். சென்னை 600094: தேவி பிரசுராலயம், 18, அப்துல் கான் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட்  1991. (சென்னை 600094: ஜென்னி ராம் பிரின்டர்ஸ், 28, தெற்கு சிவன்கோவில் வீதி).

149 பக்கம், விலை: இந்திய ரூபா 18., அளவு: 17.5×12 சமீ.

இது தேவகாந்தனின் இரண்டு நாவல்களைக் கொண்ட நூல். 1947இல் பிறந்த தேவகாந்தன் 1968இலிருந்து எழுதிவருகிறார். இவரது எழுத்தில் சமுதாயப் பார்வை அதிகம். எதையும் மனிதகுல வரலாற்றுப் பின்னணியில்,அதன் வளர்ச்சிப் போக்கில் நோக்கி, தன் புரிதலின் அடிப்படையில் எழுதுவது இவரின் சிறப்பம்சம். தமிழகத்தில் தடுப்புக்காவல் சிறைவாழ்க்கை அனுபவித்த காலகட்டத்தில்  எழுதப்பட்ட நாவல்கள். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  111568).

ஏனைய பதிவுகள்