மாலதி பாலேந்திரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
vi, 158 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 18×12 சமீ.
இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட ஒருகுழந்தை சுவீடனில் மேலைத்தேய கலாச்சாரத்தில் வளர்க்கப்படும் பின்னணியில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியரின் மூன்றாவது கதை இது. இலங்கையிலிருந்த வெளிநாடுகளுக்கு சுவீகாரம்பெற்று எடுத்துச் செல்லப்படும் குழந்தைகள் அங்கு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாக இலங்கை ஊடகங்களில் வந்த தவறான ஒரு செய்தியின் பாதிப்பு ஆசிரியரை இந்நாவலை எழுதத் தூண்டியுள்ளது. தனது மகன் அனுதரன் மற்றும் சுவீடிஷ் மருமகள் கிளேயா ஹால் ஜக்சன் ஆகியோரின் ஆதரவுடன், இயற்கையை நேசிக்கும் சுவீடன் நாட்டு கலாச்சாரம் பற்றிய ஆழமான அவதானிப்புகளை இந்நாவலில் ஆசிரியரால் பதிவுசெய்ய முடிந்துள்ளது.