8667 காலங்கள் சாவதில்லை.

தெளிவத்தை ஜோசப். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஜுன் 1974. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road)

245 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

இந்நாவலின் கதாபாத்திரங்கள் மலையகத்துத் தோட்டங்களில் ரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். உழைப்பையே நம்பிவாழும் ஒரு மக்கள் கூட்டத்தின்  அபிலாசைகள், விருப்பு வெறுப்புக்கள், நலிவு-நம்பிக்கைகள் பற்றியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் கொடுமைகள் பற்றியும் இந்த நாவல் கூறுகின்றது. மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் சம்பளம் கிளாக்கர் போன்றோரினால் சுரண்டப்படுகின்றது. ஆறுமுகம் அதற்கெதிராகத் தொழிலாளர்களை திரட்டித் தன் எதிர்ப்பைத் தெரிவிக்க முயல்கிறான். கண்ணுச்சாமி, வீரமுத்து, கண்ணம்மா முதலியோர் அவனுடன் இணைகின்றனர். தோட்டநிர்வாகத்தின் அடக்குமுறை, போலீஸ் அட்டூழியம் போன்றவற்றை மீறி போலித் தொழிற்சங்கவாதிகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்து கிளாக்கரின் சம்பளச் சுரண்டலை அம்பலப்படுத்துகின்றனர். கண்ணம்மா ஆறுமுகம் காதல் இடையூறுகளைக் கடந்து கனிகின்றது. 21ஆவது வீரகேசரி பிரசுரமாக வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  228124).

ஏனைய பதிவுகள்

Esperienza utente su Spin Platinum

La novità gaming si fa sentire con l’avvento di Spin Platinum, una piattaforma dedicata ai giocatori che cercano emozioni forti e avventure indimenticabili. Questo sito