சு.குணேஸ்வரன். இலங்கை: தினைப்புனம் வெளியீடு, 1வது பதிப்பு, புரட்டாதி 2009. (யாழ்ப்பாணம்: மதுரன் கிராப்பிக்ஸ், அல்வாய்).
vii, 116 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-51949-0-7.
யாழ். அம்பன் அமெரிக்க மிஷனரியின் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றும் சுப்பிரமணியம் குணேஸ்வரன் தொண்டைமானாறு கெருடாவிலில் பிறந்தவர். 1999இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிச் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். தனது முது தத்துவமாணிப் பட்டத்திற்கான ஆய்வாக 20ம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதைகள் என்ற ஆய்வினை மேற்கொண்டவர். துவாரகன் என்ற புனைபெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளவர். இந்நூலில் இவரது 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்ந்தோர் சென்ற இடங்களில் தாம்பட்ட கஷ்டங்கள், ஏற்றுக்கொண்ட வசைமொழிகள், பெண்கள் அனுபவித்த தயரங்கள் என்பன பற்றிப் பேசுகின்றன. புலம்பெயர் இலக்கியம், புகலிடச் சஞ்சிகைகள், மொழிபெயர்ப்புகள், தமிழ்மொழிப் பிரதேசச் செல்வாக்கு என்பன பற்றியும் விபரிக்கப்படுகின்றன.