த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
86 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1162-47-4.
இந்நூல் வையத்து வாழ்வாங்கு வாழும் நெறியினை உரைக்கும் அரிய அறிவுரைகளைக் கொண்ட 30 கட்டுரைகளை உள்ளடக்கியது. நீதிநூற்கருத்துக்களும், பழமொழிகளும் கற்றுத்தரும் பாடங்களும் விளக்கப்பட்டுள்ளன. சிறுவர் முதல் பெரியோர் வரை படித்துணரும் வகையில் ஆக்கப்பெற்றது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.