கோவிலூர் செல்வராஜன். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மார்ச் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
272 பக்கம், விலை: இந்திய ரூபா 150.,அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-81322-15-4.
இணையத்தளங்களில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்த 60 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறைகள், வாழ்வியல் பிரச்சினைகள், எம்மக்களின் மனங்களில் புகுந்து முதிழ்ந்து புரையோடிப்போயுள்ள வெறுக்கத்தக்க குணாம்சங்கள், புலம்பெயர்ந்த தமிழர்களால் அவர்களின் தாயக உறவுகளின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் எனப் பல்வேறு சமூகவியல் சார்ந்த கருத்துக்களை ஆசிரியர் தனது கட்டுரைகளில் முன்வைக்கின்றார். இக்கருத்துக்களில் பல வாசகரின் சிந்தனையைத் தூண்டிவிடும் சமூக வலுவைப்பெற்றுள்ளன. சில வாசகர்களின் பார்வையில் மாற்றுக்கருத்தையும் தோற்றுவிக்கின்றன. மொத்தத்தில் ஒரு புலம்பெயர் தமிழரின் தெளிவான பார்வையில் ஈழத்தமிழ்ச்சமூகம் நுணுக்கமாக அணுகப்பட்டுள்ளது.