8701 இலக்கிய அறிவியல் நுகர்வுகள்.

கா.விசயரத்தினம். லண்டன்: Century House, 35 Brandreth Court, Harrow, Middlesex, HA1 2JU, இணை வெளியீடு, சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

xxii, 250 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-1-873265-87-1.

நூலாசிரியர் சுவையான இலக்கியம் மற்றும் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூலை வெளியிட்டிருக்கின்றார். பண்டைத்தமிழர்; இலக்கியங்கள், தொல்காப்பியர் காலம் கி.மு.711, வாழ்வியலில் இலக்கியமும் விஞ்ஞானமும், தொல்காப்பியர் காட்டும் ஆறறிவு உயிர்கள், பண்டைத் தமிழரின் திருமணங்கள், குறுந்தொகையில் இரு இலக்கியக் காட்சிகள், சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும், அறிவுத்திறனை மழுங்கவைக்கும் மூடநம்பிக்கைகள், மனித வாழ்வியலும் வாழ்க்கை முறைகளும், கற்றோர் மனதில் எழும் கற்பனைகள், சுவர்க்கத்தில் ஒரு நாள், பேரும் புகழும் நாடித் தேடி ஓடும் மனிதர்கள், புலம்பெயர் தமிழரின் பிரித்தானிய வாழ்க்கை, உலகை உய்வி நிற்கும்இயற்கை, சங்க இலக்கியத்தில் குறிஞ்சித் தலைவன் கூற்று, இயற்கைப் பேரழிவுகள், இலட்சிய இல்லம் நாட்டின் செல்வம், மூன்றாம் பாலினராகிய திருநங்கையர், தேன்நிலவில் சீதைக்கு எழுந்த ஐயுறவு, பூமி தட்டை என்ற நினைப்பில் பலர் இன்றும் வாழ்கின்றனர், பரப்பளவில் சுருங்கிவரும் நிலா, கால்களுடன் நடமாடிய பாம்பினம், புலால் உண்ணும் தாவரமும் மரவினமும், மனித வாயில் ஊறும் உமிழ்நீர் பால் தேன் கலந்த அமிழ்தம், மக்கள் மனதில் மிளிரும் சுதந்திரதாகம், பெருமையும் பேரழிவும், சந்தேகித்தால் சந்தோஷமில்லை, வால்மீகி காட்டும் சஞ்சீவி மலை மூலிகைகள், ஆடவரின் ஆண்மை, ஆசியாவைச் செழிக்கவைத்த கடவுள் சுட்ட அப்பம், தருமர் ஒரு தருமியா கருமியா, பாண்டி ஆட்டம், இறைஞானமும் விஞ்ஞானமும் இரு கண்களானால், திருமந்திரம் காட்டும் வழிபாடு ஆகிய தலைப்புகளில் அமைந்த 34 பலவினக் கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.  இந்நூலாசிரியர் நுணாவிலூர் கா.விசயரத்தினம், யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

ஏனைய பதிவுகள்