லெனின் மதிவானம். கொழும்பு 11: பாக்யா பதிப்பகம், இல. 10, இரண்டாவது ரோகிணி ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (ஹட்டன்: தாரணி அச்சகம், 4V, ஸ்டார் சதுக்கம்).
xxviii, 120 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1805-03-6.
இலங்கை மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட லெனின் மதிவானம் ஈழத்து இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க விமர்சகராவார். இவரது எழுத்துக்கள் மார்க்சிய பார்வையில் வரலாற்றையும் பண்பாட்டையும் கண்டுகொள்ளத் தூண்டுபவை. இந்நூலில் இவர் எழுதிய இருபது திறனாய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலையக நாட்டார் இலக்கியம் மரபும் மாற்றமும், திருக்குறளுக்கும் கல்வியியலுக்குமான புதிய பார்வை-புதிய பங்களிப்பு, தகழியின் படைப்பாளுமை- செம்மீன் நாவலை முன்னிறுத்தி, இளமையின் கீதம்- சீன பழைமை சமூகத்திதை எதிர்த்துப் போரிட்ட ஒரு இளம்பெண்ணின் கதை ஆகிய கட்டுரைகளுடன் திருமதி மீனாட்சியம்மாள் நடேசையர், சீ.வி.வேலுப்பிள்ளை, மக்சிம் கார்க்கி, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, மல்லிகை ஜீவா, நந்தினி சேவியர், ஆதவன் தீட்சண்யா ஆகிய ஆளுமைகள் பற்றிய கருத்துக்களும், மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல், சிவனு மனோஹரனின் கோடாங்கி, கம்யூனிஸ்ட் கார்த்திகேயனின் நகைச்சுவை ஆளுமை- தீர்க்கதரிசனம், வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள், ஆகிய நூல்கள் பற்றிய விமர்சனங்களும் இந்நூலில் ஆய்வுக் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. பின்னுரையாக கலாநிதி ந.இரவிந்திரன் எழுதிய விமர்சனக் குறிப்பும் இந்நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.