8710 எண்ணமும் எழுத்தும்.

எஸ்.சந்திரபோஸ். கொழும்பு 6: T.லோகநாதன், அஸ்டன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vii, 118 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ.

ஆசிரியப்பணியில் நீண்டகாலம் இயங்கிய திரு. சந்திரபோஸ் தமிழ் இலக்கிய உலகிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். இவர் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். மானுடம் பாடிய பாரதி, பவளவிழா நாயகி திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், குறமகள் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம்- சந்திப்பு, எழுத்துப் போராளி எஸ்.பொ., பிரேம்ஜி- இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலவர், சமூக சமத்துவம் மலர உழைத்துவந்த உதயதாரகை கே.டானியல், வாழ்நாள் சாதனையாளர் மல்லிகை டொமினிக் ஜீவா, சமூக அரசியல் பணியாக எழுத்தினை ஆளும் தெணியான், ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் என்.கே.ரகுநாதன், மலையக தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம், மலையக இலக்கியச் செம்மல் தெளிவத்தை ஜோசப், பகுத்தறிவுப் பகலவன் செல்வா இலங்கையன், நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும், சாதிக்கொரு வீதியா இது சிவபிரான் வகுத்த நீதியா?, 2007 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், வன்னி வாழ்வும் வளமும், ஐங்குறுங் கதைகள், மாறுகின்ற புறமும் மாறா அகமும் (சிறுகதை), நிதர்சனம் (கவிதை), வாசித்ததும் யோசித்ததும் ஆகிய 20 ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229438).

ஏனைய பதிவுகள்

Jogo

Content Aquele Funciona Briga Bônus Do Acabamento? Fairytale Casino Perguntas Frequentes Acercade Demanda Símbolos Comuns Caça Niquel Halloween Slot Como Como Onde Aprestar Arruíi Game