அருணாசலம் சண்முகதாஸ். சென்னை 600 113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், C.I.T. வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 1998. (சென்னை 600 014: தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை).
(6), 155 பக்கம், விலை: இந்திய ரூபா 35.00, அளவு: 21.5×14 சமீ.
காலம்தோறும் மாறிவந்த தமிழ்ப் பாவடிவங்களைப் பற்றிப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் இந்நூலில் விளக்குகின்றார். வரலாறும் இலக்கியப் பின்னணியும், ஆசிரியப்பாவின் வளர்ச்சி நிலைகள், வெண்பாவும் அதன் வளர்ச்சி நிலைகளும், கலிப்பாவும் அதன் வளர்ச்சி நிலைகளும், பாவினம் பிறந்தது, பாவினங்களின் வளர்ச்சி, யாப்பு வடிவங்களில் நாட்டுப்பாடற் செல்வாக்கு ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.