எச்.எம்.பி.முஹிதீன். கல்கிசை: எச்.எம்.பி.முஹிதீன், தலைவர், அகில இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சம்மேளனம், 18 வட்டாரபொல ரோட்இ 1வது பதிப்பு, ஜுன் 1979. (கொழும்பு 10: Idiris Printers, 95 A Maligawatte Place).
16 பக்கம், விலை: ரூபா 40, அளவு: 18×12 சமீ.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டம் பெற்ற ஜனாப் எம்.எம்.உவைஸ் அவர்களுக்கு அவரது பிறந்த ஊரான பாணந்துறையில் அப்பகுதி மக்களால் ஹேனமுல்ல அல்ஜிலான் மகாவித்தியாலய மண்டபத்தில் வரவேற்புபசார விழாவொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. சிங்கப்பூரிலிருந்து வருகைதந்த தமிழறிஞர் நாகை ஜனாப் எம்.சி.ஸையது சாஹிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எச்.எம்.பி.முஹிதீன் அவர்கள் ஆற்றிய உரையின் நூல்வடிவம் இது. தமிழின் செழுமைக்கும் கீர்த்திக்கும் வளர்ச்சிக்கும் பன்னாட்டறிஞர்களும் பல்வேறு மதத்தவரும் ஆற்றிய அர்ப்பணிப்புடனான சேவைகளை இவ்வுரையின் வாயிலாக ஆசிரியர் பதிவுசெய்கின்றார்.