8734 தன்னேர் இலாத தமிழ்: கட்டுரைகள்.

க.வேந்தனார் (இயற்பெயர்: க.நாகேந்திரம்பிள்ளை). சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, மே 2010. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை).

360 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-81-89748-88-3.

5.11.1918இல் யாழ்ப்பாணம் வேலணையில் பிறந்த வித்துவான் வேந்தனார், 1940களில் எழுத்துலகில் இறங்கியவர். 32 அண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். 1934-45 காலகட்டத்தில்  தாம் கற்ற வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை, சரஸ்வதி வித்தியாசாலை ஆகியவற்றிலும், 1946 முதல் தான் மறையும் வரை யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரியிலும் ஆசிரியப் பணியாற்றியவர். 1944இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றவர். மறைமலை அடிகளாரைத் தன் முன்னோடியாகக் கொண்டு வாழ்ந்தவர். ஈழத்தமிழ் உலகில் முடிசூடா வேந்தனாக கால்நூற்றாண்டு ஆட்சிசெலுத்தி 18.9.1966இல் அமரரானவர். வித்துவான் க.வேந்தனார் எழுதிய தன்னேர் இல்லா தமிழ், உரிமைக் குரல், கபிலரின் புலமை உள்ளத்தில் இடம்பெற்ற பாரியின் உயர் பண்பு, இலக்கியத்தில் வயல் வளம், இலக்கியத்தில் பாலை நிலம், திருக்குற்றாலச் செந்தமிழ், மூவர் தமிழ் விருந்து ஆகிய தலைப்புகளில் இவர் எழுதிய ஏழு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்