திருமலை நவம் (இயற்பெயர்: சிதம்பரப்பிள்ளை நவரத்தினம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை).
xviii, 243 பக்கம், விலை: ரூபா 650.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-659-321-1.
மூன்று நூற்றாண்டுகால திருக்கோணமலைப் பிரதேசத்தின் கலை இலக்கிய வரலாற்றினைப் பற்றியும் அதனுடன் ஊடாடிய ஆளுமைகளைப் பற்றியும் இந்நூல் கூறுகின்றது. கவிதை, சிறுகதை, நாவல் ஆகியவற்றை மட்டுமல்லாது இப்பிரதேசத்தில் இடம்பெற்ற நாடகம், தொலைக்காட்சி நாடகம், குறும்படம், இசை, மெல்லிசை, சிறுசஞ்சிகைகள், கையெழுத்துப் பிரதிகள் போன்ற ஏனைய கலை இலக்கிய முயற்சிகளையும் பதிவுசெய்கின்றது. திருமலை நவத்தின் நாற்பதாண்டுக்கால தேடலின் அறுவடையாக இந்நூல் மிளிர்கின்றது. முன்னோட்டம், முன்னோடி இலக்கியங்கள், கவிதை, சிறுகதை, நாவல், நாடக வளர்ச்சி, இசை மரபு வளர்ச்சி, மெல்லிசை ஆகிய எட்டுப் பிரிவுகளில் இந்நூலின் பிரதான விடயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏழு பின்னிணைப்புகளில், ஜேர்மன்- க.சரவணபவனின் அகராதி முயற்சிகள், திருக்கோணமலையில் வெளிவந்த சிற்றிதழ்கள், சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், சிறுவர் நாவல்கள் மற்றும் திருக்கோணமலைக் கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் கொண்ட பட்டியல்களும் இடம்பெற்றுள்ளன. கவிஞர், சிறுகதையாளர், விமர்சகர், நாடக நெறியாளர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றவர். திருக்கோணமலை உவர்மலை விவேகானந்தக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் திருக்கோணமலை மண்ணின் கலை, இலக்கிய வளர்ச்சியிலும் ஈழத்து இலக்கிய பரப்பில் அதன் பங்களிப்பை முன்னிறுத்திச் செயற்படுவதிலும் நீண்டகாலமாக உழைத்து வருபவர்.