8737 திருவள்ளுவரும் சிக்மன் பிராய்டும்: காமத்துப்பால் சார்ந்த ஒப்பீடு.

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2009.(சென்னை : சிவம்ஸ்)

167 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.

வள்ளுவரின் நனவு-கனவு என்னும் எதிர்ச்சொற்கள் இந்நூலில் முதன்மை பெறுகின்றன. இவை திருக்குறள் 122வது அதிகாரத்தில் வருபவை. நனவு என்பதற்கு எதிர்ச்சொல்லாக சிக்மன் பிராய்டு கண்டுபிடித்த நனவிலி மனம் (unconscious mind) என்பது காமத்துப் பாலுக்குப் புது விளக்கம் தரும். இந்நூல் திருவள்ளுவரையும் சிக்மன் பிராய்டையும்  காமம் சார்ந்த கருத்துநிலைகளை வைத்து  21 இயல்களில் ஒப்பீடு செய்கின்றது. நூலாக்கம் பற்றிய குறிப்புகள், வள்ளுவரும் சிக்மன் பிராய்டும், உளவியல் ஆய்வு-நனவும் கனவும், பாலின்பம், காமக் குறியீடுகள், மனித மனம் நாடும் இன்பம், விழிப்பு மனம்-விழிப்பற்ற மனம், மனநலம் பற்றி, இந்திய நூலில் காமம்-காமசூத்திரம், கள்ளும் காமமும், இன்பம்-ஆக்கிரமிப்பு, ஆணவம் (இட், ஈகோ), காமமும் ஆக்கிரமிப்பும், வதையின்பம், சாவுணர்ச்சி-ஆழ்மன உணர்ச்சி, இருபிரிவுகள், கனவுகள் பற்றிய உண்மைகள், சிக்மன் பிராய்டு-சில குறிப்புகள், நனவும் கனவும்-காமத்துப்பால் ஒரு தனிப்பார்வை, காமத்துப்பால் -25 அதிகாரங்கள் ஆகிய தலைப்புகளின்கீழ் இந்நூல் விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

13341 குடும்ப வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு இலங்கையின் சட்டத்தின் கீழ் நடைமுறையிலிருக்கும் ஏற்பாடுகள்.

சாறுக்க சமரசேகர. இராஜகிரிய: நீதி நியாயத்தைச் சமமாக அணுகும் கருத்திட்டம், இல. 40, புத்கமுவ வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 10: ளுரூளு பிரிண்டர்ஸ், மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள், 49, ஜயந்த

13A05 – கர்னாடக சங்கீதம்: தரம் 10: வழிகாட்டற் குறிப்புகள்.

கிருஷ்ணவேணி மயில்வாகனம். யாழ்ப்பாணம்: கீதவாஹினி இசைக் கல்லூரி, கொழும்புத்துறை, 3வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1998, 2வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை பதிப்பகம்). ix, 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: