பி.பி.தேவராஜ், சி.வன்னியகுலம், பி.முத்தையா, கே.விஜயன். கொழும்பு 13: துரைவி பதிப்பகம், 85 ஸ்ரீ இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
துரை. விஸ்வநாதனின் துரைவி பதிப்பகம் வெளியிட்ட மலையகச் சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரண்டு மலையகச் சிறுகதைத் தொகுதிகள் மற்றும் பாலாயி என்ற குறுநாவல் தொகுதி உள்ளிட்ட மூன்று நூல்களின் வெளியீடு பற்றிய அறிமுகப் பதிவு. இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பி.பி.தேவராஜ் (பிரமிக்கச் செய்யும் அசுர முயற்சி புல்லரிக்கச் செய்யும் அபார சாதனை), இலங்கை ரூபவாகினியின் தமிழ்ப்பகுதிப் பணிப்பாளர் சி.வன்னியகுலம் (மலையக எழுச்சிக்கான புதிய தளம்), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி ஆசிரியர் பி.முத்தையா (மும்மணிகள்), வீரகேசரி பத்திரிகையின் கலாசாரம் பகுதிப்பொறுப்பாளர் கே.விஜயன் (தொடர்கதையாகும் இலக்கிய ஆய்வுகளும் புதிய வரலாற்றுப் பதிவுகளும்/ மலையக இலக்கியத்தின் மலர்விற்கு உரமாகும் துரைவியின் மூன்று நூல்கள்)ஆகியோர் வழங்கிய கட்டுரைகளின் தொகுப்பு இது.