இளைய அப்துல்லாஹ் (இயற்பெயர்: எம்.என்.எம்.அனஸ்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்).
159 பக்கம், விலை: இந்திய ரூபா 130.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-65-6.
நீரில் விளக்கெரியும் நந்திக்கடல், முருகனை விழுங்கிய புத்தர், ஈழப் பிரச்சினையில் சிங்களப் பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும், இலங்கையில் ஆதிவாசிகள், கொண்டெயினர் பயணம், மூன்றாம் முள்ளிவாய்க்கால், யாழ்ப்பாணம் போகின்ற வெளிநாட்டுத் தமிழர், வயதாளிகளும் லணடனும், பாலியல் துஷ்பிரயோகம். பற்றி எரியும் லண்டன், லெஸ்பியன்கள் தொடர்ந்த வழக்கு, தாய்ப்பால் ஐஸ்கிரீம், ஸ்ரீலங்காவின் கொலைக்களம், சிலிக்கன் மார்பகம், எனது அப்பா ஒரு பெண், கலியாணம் என்கின்ற பயங்கரம், முதல் காதல், முதல் ஒப்பிறேசன், எனது பள்ளிப்பராயம், இரண்டாம் கலியாணம், பயந்த கராட்டி மாஸ்டர், வைரமாளிகை- யாழ்ப்பாணத்தின் விகடகவி, மரணங்களும் அஞ்சலிக் குறிப்பும், திக்கவயல் தர்மகுலசிங்கம், பேராசான் கா.சிவத்தம்பி ஆகிய 25 தலைப்புகளில் எழுதப்பட்ட பலவின பத்தி எழுத்துக்களின் தொகுப்பு இது. சமகால அரசியல், சமூக கலாச்சார, புலம்பெயர் வாழ்வியல் நிகழ்வுகளை தனக்கேயுரிய அனுபவப் பகிர்வுகளாக எளியவடிவில் இக்கட்டுரைகளில் அனஸ் பதிவுசெய்கின்றார். 1985ம் ஆண்டிலிருந்து சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ் என்ற புளைபெயர் கொண்ட எம்.என்.எம். அனஸ். இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினை 2005இல் இவரது பிணம் செய்யும் தேசம் நூல் பெற்றிருந்தது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ.சிறிவர்த்தன விருது பெற்றவர். புலம்பெயர் எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவராகக் கணிக்கப்பெற்றுள்ள அனஸ் 2000ம் ஆண்டு முதல் லண்டன் தீபம் தொலைக்காட்சி நிறுவனத்தில் இணைந்து செய்தி வாசிப்பாளர், விவரணப் படத் தயாரிப்பாளர், அறிவிப்பாளர் ஆகிய பணிகளை மேற்கொள்பவர்.