அப்துல் காதர் லெப்பை (மூலம்), அமீர் அலி (பதிப்பாசிரியர்). மேற்கு அவுஸ்திரேலியா: கலாநிதி ஏ.சீ.எல். அமீர் அலி, பொருளியல் துறை, மேர்டொக் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: பரணன் அசோஷியேற்ஸ், 403, 1/1 காலி வீதி).
xiv, 240 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-8535-10-3.
கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய காத்தான்குடிக் கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1913-1984) பிரபல ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவர். மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர். இவரது சிந்தனை வளம் மிக்க ஆறு கட்டுரைகளையும் கவித்துவம் மிக்க சில கவிதைகளையும் இந்நூலில் தொகுத்துள்ளார் அமீர் அலி. பெண்களின் இன உரிமைப் போராட்டம், கலாசாரம், மூல இஸ்லாமும் மாறுபட்ட இஸ்லாமும், லோகாயதமும் ஆத்மீகமும், மதபோதனையும் சாதனமும், சிந்திக்கும் ஆற்றல் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் அமீர் அலி, புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருபவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49637).