8753 லண்டன் உங்களை வரவேற்பதில்லை.

இளைய அப்துல்லாஹ் (இயற்பெயர்: எம்.என்.எம்.அனஸ்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, அக்டோபர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).

174 பக்கம், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-56-5.

இளைய அப்துல்லாஹ்வின் இருபத்து நான்கு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களே கட்டுரைகளின் பேசுபொருள்.  ஓர் அகதியாக லண்டனில் குடியேறி இன்று பிரபல்யமான தமிழ் ஊடகப் பணியாளராகப் பணியாற்றுகின்ற கட்டுரையாசிரியர் லண்டன் என்ற கனவு தேசத்தின் இருவேறு இயல்புகளையும் இக்கட்டுரைகளில்  முன்வைக்கிறார். மேற்குலகைச் சேர்ந்தவர்களின் லண்டன் காட்சிகள் ஒளிநிரம்பியவை. உற்சாகமளிப்பவை.  அங்குவாழும் பெரும்பான்மையான கீழைத்தேசத்தவரின் லண்டன் காட்சிகள் துயர இருள்படிந்தவை. இவ்விரு வெவ்வேறுபட்ட மனநிலைகளையும் பிரித்தறிந்து தனது பத்தி எழுத்துகளில் லாவகமாகத் தீட்டுபவர் அனஸ்.  1985 முதல் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஆக்க் இலக்கியத்துறையில் எழுதி வரும் இவர், லண்டன் தீபம் தொலைக்காட்சி நிறுவனத்தில்  பணியாற்றிவருகிறார்.

ஏனைய பதிவுகள்

15821 வள்ளுவன் சொல்லே வாழும் நெறி.

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). 165 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,