மனோன்மணி சண்முகதாஸ். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், இல. 340, கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 340, கடற்கரைத் தெரு).
166 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9396-46-8.
கம்பராமாயணத்தில் இடம்பெறும் வாலி வதைப்படலம் பற்றியதொரு விரிவான இலக்கிய விவாத அரங்காக இந்நூல் அமைகின்றது. வாலி வதைப்படலத்தின் கட்டமைப்பு (கம்பராமாயணத்தில் வாலிவதைப்படலத்தின் இடம், கதைப்போக்கு, காட்சிப்படுத்தல் உத்தி), கதைமாந்தர் இயல்பு (வாலி, சுக்கிரீவன், இராமன், இலக்குவன், அனுமன், தாரை, அங்கதன்), வழக்கும் வழக்காளிகளும் (வழக்காடு மன்றம், வழக்காளியும் எதிராளியும், குற்றச்சாட்டுகள், வழக்குரைகள், வரம்கேள் உரை), கம்பனின் புனைதிறன் (உவமைச் சிறப்பு, தனித்துவமாகக் காட்சிப்படுத்தல், சொல்லாட்சி), வரம் தரும் வள்ளல் (கம்பனும் வான்மீகியும், கம்பனின் பக்திநிலையும் புலப்பாடும், நாயகன் இராமன், கம்பனின் சமூக நோக்கு) ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறையில் பிறந்தவர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.கைலாசபதியின் வழிகாட்டலில் முதுதத்துவமாணிப் பட்டமும், பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வழிகாட்டலில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரவு விரிவுரையாளராகவும், ஜப்பான் டோக்கியோ கக்சுயின் பல்கலைக்கழகத்தின் மொழியியல் விரிவுரையாளராகவும் 1983-2003 காலகட்டங்களில் பணியாற்றியவர். 2008இல் இவருக்கு வட மாகாண ஆளுநர் விருது வழங்கப்பட்டது.