8754 வன்னிப்பிரதேச நாவல்கள்.

மயில்வாகனம் இரகுநாதன். யாழ்ப்பாணம்: கலாநிதி ம.இரகுநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த் துறை,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆவணி 2006. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிறின்டேர்ஸ், கந்தர்மடம்).

vii, 124 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ.

தமிழில் பிரதேச நாவல்கள், ஈழத்துத் தமிழ் நாவல்களில் வன்னிப் பிரதேசம், வன்னிப் பிரதேச நாவல்கள் புலப்படுத்தும் சமுதாயப் பிரச்சினைகள், வன்னிப் பிரதேச நாவல்களில் மண்வாசனை, முல்லை மணியின் மல்லிகைவனம் நாவல் தொடர்பான சில குறிப்புகள் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  இலக்கியங்களை வரலாற்று அடிப்படையிலும் திறனாய்வு நோக்கிலும் ஒப்பீட்டு அடிப்படையிலும் எவ்வாறு நோக்கலாம் என்பதை நூலாசிரியர் நன்கு வெளிப்படுத்தியுள்ளார். தனித்துவமான மண்வாசனை கொண்ட வன்னிப் பெருநிலப்பரப்பின் பண்புகளைத் தெளிவாகப் புலப்படுத்தும் ஈழத்து நாவல்கள் இதுவரை வெளிவந்துள்ளதா என்ற தேடலையும் ஆசிரியர் நடுநிலையில் நின்று மேற்கொண்டுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 184415).

ஏனைய பதிவுகள்

Neue Casinos 2024

Content Fresh Kasino Grundvoraussetzungen Für jedes Diese Casino Eur Bonus Bloß Einzahlung Sonst tätigen Diese nachfolgende erforderliche Einzahlung damit Freispiele zu bekommen. Nachfolgende Umsatzbedingungen werden