8757 விமரிசன ஊழல்கள்.

அரூப் பிரமிள். குமரி மாவட்டம்: கொல்லிப்பாவை வெளியீடு, இடையன்விளை, பொற்றையடி  P.O, 1வது பதிப்பு, ஜுன் 1982.(நாகர் கோவில்: ஸ்ரீபரந்தாமன் பிரிண்டர்ஸ், 78V, கோர்ட் வீதி).

58 பக்கம், விலை: இந்திய ரூபா 4., அளவு: 21×13 சமீ.

ஜீவ்ராமு கௌந்த் அரூப் பிருமிள், பிரமிள், பானுசந்திரன் போன்ற பல புனைபெயர்களில் எழுதிவந்தவர் தருமு சிவராம் (20.4.1939- 06.01.1997). இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவராயினும் தமிழகத்திலேயே வாழ்ந்து பெரும்பாலும் தமிழக இலக்கிய விமர்சகராகவே பலராலும் இனம்காணப்பட்டவர். பாரதி, புதுமைப்பித்தன் போன்றோருக்குப் பின் தோன்றிய முக்கிய தமிழ் இலக்கிய மேதையாகத் தமிழகத்தில் கருதப்பட்டவர். அவர் தமிழக இலக்கியம்பற்றி பல விமர்சனங்களை முன்வைத்தவர். அதனால் பிரபல இலக்கிய ஜாம்பவான்களின் எரிச்சலுக்குட்பட்டவர். தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைப்பதால் இவருக்கு சண்டைக்கட்டுரை எழுதுபவர் என்ற அடைமொழியும் உண்டு. இவரது இலக்கிய விமர்சனத்தின் ஒரு சிறு அங்கமே இந்நூலாகும்.

ஏனைய பதிவுகள்

10197 சமூக வரலாறும் வரலாற்றில் தனிநபர்களும்.

க.சண்முகலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 129 பக்கம், விலை: ரூபா