அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை, 30, கடைச்சாமி வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, மார்கழி 2011. (யாழ்ப்பாணம்: கங்கை பிறின்ரேர்ஸ், 781 சிவலிங்கப்புளியடி, காங்கேசன்துறை வீதி).
xxviii, 144 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.
இந்நூலில் ஐந்து நாடகங்களும், ஒரு சிறுகதையும், ஏழு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. சிறுகதை எழுதுவது எப்படி, மேற்குலக நாடகத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, நல்ல இலக்கியங்களை இனம் காண்பது எப்படி, நாடகம் எழுதுவது எப்படி, பல்கலைக்கழகக் கல்வி, நாடகங்கள் பற்றிய விளக்கங்கள், நவீன நாடக நூல் விமர்சனம், ஆகிய ஏழு கட்டுரைகள் உள்ளன. அத்துடன் ஓர் இடம் பெயர்வின் கதை, இருப்பதற்கு இடம், ஒரு பாடசாலை முன்னேறுகிறது, அயலவர்கள், கடமையா கவிதையா ஆகிய ஐந்து நவீன நாடகங்களும் இடம்பெற்றுள்ளன. ஒரு நாடகாசிரியரின் கதை என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் உள்ளது. இது ஆசிரியரின் 27ஆவது நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 226208).