8759 எண்ணங்களும் வண்ணங்களும்.

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: திருமதி விஜயலட்சுமி திருநாவக்கரசு, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

xii, 391 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-52960-1-4.

இந்நூலில் ஆசிரியரின் 30 பலவினக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தேசிய இனப்பிரச்சினை, அழகியல் கல்விச் சிந்தனைகள், கல்வியியல், கவிதை இலக்கியம், தமிழ் கற்றலும் கற்பித்தலும், சைவ சமயம், ஆருத்திரா தரிசனம், ஐயனார் வழிபாடு, சினிமா இலக்கியம், நூல் விமர்சனங்கள், இலக்கியவாதிகளின் வாழ்வும் பணியும் என இவரது பார்வைகள்  கட்டுரைகளில் விரிந்துள்ளன. ஈழகேசரி நா.பொன்னையா, இலங்கையர்கோன், டாக்டர் நந்தி, சொக்கன், கவிஞர் தில்லைச் சிவன், கே.டானியல், பண்டிதர் சு.வேலுப்பிள்ளை, உடுமலை நாராயணகவி, கவிஞர் சுரதா, குன்னக்குடி வைத்தியநாதன், பண்டிதர் க.சச்சிதானந்தன், கவிஞர் மு.செல்லையா போன்றோர் தனிக் கட்டுரைகளில் இவரது சிறப்புப் பார்வையைப் பெற்றுள்ளனர். திரைப்படத்துறையில் பாடகர்கள் ஜிக்கி, பி.லீலா போன்றோர் பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர்  கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகவும், பிரதி அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

9556 சின்னஞ்சிறு கிளியே.

செ.யோகநாதன். சென்னை 600017: தமிழோசை பதிப்பகம், 84, ஹபிபுல்லா சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 1987. (சென்னை 600017: தமிழோசை அச்சகம், 84, ஹபிபுல்லா சாலை, தியாகராய நகர்). xvi, 312