8763 பகிர்வு: கட்டுரைத் தொகுப்பு.

சமரபாகு சீனா உதயகுமார். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6- 5/3V, எட்வேர்ட் அவென்யு, 1வது பதிப்பு, மார்ச் 2012. (மகரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).

xvi, 136 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-53921-2-9.

தான் படித்ததை மற்றோரும் அறியவேண்டும் என்ற வேணவாவில் மற்றோருடன் பகிர்ந்துகொள்ளும் எண்ணத்தில் எழுதப்பட்ட பல்வேறு தகவல்களுடன்கூடிய செறிவான 20 கட்டுரைகளின் தொகுப்பு பகிர்வு என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது. வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், வாழ்வியல் சார்ந்த கட்டுரைகள், நடப்பியல் சார்ந்த கட்டுரைகள் என நான்கு பிரிவாக வகுக்கக்கூடிய உள்ளடக்கத்தை இக்கட்டுரைகள் கொண்டுள்ளன. வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கலாநிதி ஆறு திரு முருகன்,  பேராசிரியர் மா.நடராஜ சுந்தரம், கணினி வித்தகர் பில் கேட்ஸ் போன்ற முக்கிய ஆளுமைகள் பற்றிக் கூறியுள்ளார். இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளில் கவிஞர் மேத்தா, பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் ஈழத்துக் கவிஞர்களின் இலக்கிய ஆளுமைகள் பற்றிக் கூறுகின்றார். வாழ்வியல் சார்ந்த கட்டுரைகளில் ஆழமான வாழ்வியல் தத்தவங்களையும் அறிவுரைகளையும் எளிய சிறுகதைகள், சம்பவங்கள் மூலம் புரியவைக்கிறார். நடப்பியல் சார்ந்த கட்டுரைகளில் நிலவைப் பார்த்து நாய்குரைத்தது  என்ற கட்டுரை வரவை மீறிச் செலவுசெய்யும் ஆடம்பரக்காரரை கண்டிக்கின்றது. க.பொ.த உயர்தர பாடத்தெரிவும் இசட் புள்ளியும் என்ற கட்டுரை மாணவர்களுக்கு அரிய ஆலோசனைகளை வழங்குகின்றது. ஓய்வபெறும் வயதெல்லை, அலுவலக நேரக்குறைப்பு, பெண்களின் உடைகள், ஜோதிடக்கலை பற்றிய நையாண்டி ஆகியன பற்றிய இவரது கருத்துக்களை நடப்பியல் சார்ந்த கட்டுரைகள் தருகின்றன.

ஏனைய பதிவுகள்

12279 – அற்புதமான நீரைப் பராமரிப்போம்.

சரத் அமரசிறி (ஆங்கில மூலம்), சீரங்கன் பெரியசாமி (மொழிபெயர்ப்பாளர்). நுகேகொட: இலங்கை இயற்கை ஒன்றியம், 546/3, வட்ட மாவத்தை, கங்கொடவில, 1வது பதிப்பு, ஜுன் 2008. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன்ட் டிசைனர்ஸ், இல.

16260 சுவடுகள் 95.

அ.சிவஞானசீலன் (மலர்ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம் (3ஆம் வருடம்), யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி). 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.