8764 பல்சுவை இலக்கியக் கோலங்கள்.

கமலாவதி இராமநாதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: B.V.R ஆப்செட்).

viii, 72 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 18×12.5 சமீ.

கமலாவதி இராமநாதன் யாழ்ப்பாணம், மாதகல் கிராமத்தைச் சேர்ந்தவர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பயிற்சிபெற்று நுவரெலிய, காங்கேசன்துறை,  மாதகல் ஆகிய இடங்களில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். 1992முதல் கனடாவில் வாழ்ந்து வருகிறார்.  மொன்றியல் செஞ்சோலை தமிழ்ச் சிறார் கல்விநிலையம், கலைநெறிக் கல்விக் கழகம் ஆகியவற்றில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோவிலின் கலைநெறிக் கல்விக் கழகத்தின் அதிபராகப் பணியாற்றுகின்றார். இந்நூலில் 29 தலைப்புகளில் இவர் எழுதிய கவிதைகள், நினைவுப் பதிவிலிருந்து எழுத்தாக்கம்பெற்ற தாலாட்டுக்கள், ஒப்பாரிகள், அவை தொடர்பான சில கட்டுரைகள் எனப் பல்சுவை இலக்கியக் கோலங்களாகப் பதிவுபெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

8174 பெரியபுராணம்: திருநகரச் சிறப்பு.

க.மயில்வாகனனார், க.வைத்தீசுவரனார் (தொகுப்பாளர்கள்). காரைநகர்: காரைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம், ஆண்டு விபரம் தரப்படவில்லை.(யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). iv, 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. கல்விப் பொதுத் தராதரப்