லண்டன்: Eelavar Literature Academy of Britain (ELAB), Century House, 35 Brandreth Court, Harrow, Middlesex, HA1 2JU, 1வது பதிப்பு, 2012. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).
240 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-1-873265-82-6.
நல்ல கலை இலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் 2006இல் லண்டன் கொலிண்டேல் பகுதியில் உருவாக்கப்பட்டது தான் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம். எழுத்தாளர்களின் ஒருங்கிணைப்பினால் மாதாமாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன்மூலம் பெறப்பட்ட இலக்கிய வடிவங்களை புடம்போட்டு கனகச்சிதமாக பூந்துணர் என்னும் நூலாக வெளியிட்டுள்ளனர். 2007இல் முதலாவது தொகுதி வெளிவந்துள்ளது. இம்மூன்றாவது தொகுப்பில் சீதாதேவி மகாதேவாவின் 16 ஆக்கங்களும், சிவா. தியாகராஜாவின் ஒன்பது ஆக்கங்களும், நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களது 14 ஆக்கங்களும் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் 22 ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. படைப்பாளிகளின் பெயரின் கீழ் அவ்வப்படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. படைப்பாளி பற்றிய விபரக்கறிப்பும் காணப்படுகின்றன. இறுதிப்பிரிவில் டென்மார்க் வீ.ஜீவகுமாரன், நூலகவியலாளர் என்.செல்வராஜா ஆகியோரின் விமர்சன/அறிமுகக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவை பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் அவ்வப்போது ஒழுங்குசெய்த சந்திப்புகளில் படிக்கப்பெற்றவை.