8785 காபுலின் தூக்கணாங்குருவிகள்.

யஸ்மினா ஹத்ரா (அல்ஜீரிய  மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, டிசம்பர்;  2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

204 பக்கம், விலை: இந்திய ரூபா 220., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-93-81322-11-6.

தடம் பதித்த ஆபிரிக்க இலக்கியங்கள் என்ற தொடரில் வெளிவரும் அல்ஜீரிய மொழிபெயர்ப்பு  நாவல். அல்ஜீரிய இராணுவத்தில் பணிபுரிந்த முஹம்மது என்பவர் பச்சை மல்லிகை என்னும் பொருள் தரும் வகையில்  யஸ்மினா ஹத்ரா லுயளஅiயெ முhயனசய  என்ற புனைபெயரில்  ஆக்கஇலக்கியம் படைத்துவந்தார். பெரிதும் பாராட்டப்பெற்ற நாவல்கள் பல எழுதியபோதிலும் அவரது உண்மையான அடையாளம், இவர் இராணுவத்திலிருந்து விலகி பிரான்சில் வாழ்ந்த வேளை வரையிலான 2011வரை தெரியாமலேயே இருந்தது. அல்ஜீரிய உள்நாட்டுப் போரின் காலத்தில் இவரது புனைபெயர் இவரை தணிக்கைத் தொல்லைகளிலிருந்து காப்பாற்றிவிட்டது. இந்நூல் இவர்  எழுதிய The Swallows of Kabul  என்ற நாவலின் பிரெஞ்சுவழித் தமிழாக்கமாகும். இந்நாவல் காபுலிலே தலிபான்களுடைய ஆட்சி நடந்த காலத்தில் இரண்டு வெவ்வேறு தளங்களில் வாழ்ந்த இரண்டு தளபதிகளுடைய வாழ்க்கையைச் சித்திரிக்கிறது.  இதன்மூலம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினுடைய மனப்போக்குகளையும் முஸ்லிம் உலகம் எதிர்நோக்கும் சிக்கல்களையும் புரிந்துணர்வுடன் சொல்லுகின்றார்.  அண்மையில் ஜேர்மன் வானொலிக்கு வழங்கிய செவ்வியொன்றிலே தனது நாவல் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இந்த நாவல் மூலம் பிரச்சினை ஒன்றின் மையப்பொருளைச் சொல்லுகின்றேன். மதவெறி என்பது எல்லோரையும் அச்சுறுத்தும் ஒன்றாகும். அதன் பின்னணியையும் அதற்கான காரணிகளையும் எல்லோரும் விளங்கிக்கொள்ளச் செய்வதுதான் என் பங்களிப்பாகும்’ என்று யஸ்மினா ஹத்ரா குறிப்பிடுகின்றார்.

ஏனைய பதிவுகள்

17,000+ Noppes Online Slots Acteren te 2024

Hieronder gelijk computerprogramma van gij populairste spelontwikkelaars afwisselend Nederlandse online casino’s. Kli appreciren gij link wegens eentje uitgebreide review overheen u afgelopen ontwikkelaar gedurende spelle.

El Vivienda para Juegos de Casino Online

Content Amatic juegos de casino – Marilyn monroe Descuento del casino: Beste Sonnennächster Planet Verbunden Casinos Qua Echtgeld Vortragen 2024 Tragamonedas regalado empezando por tu