வி.பி.மரியாம்பிள்ளை (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்; ஆ.ஏ.ஆசீர்வாதம் வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1976. (யாழ்ப்பாணம்: ஆசிர்வாதம் அச்சகம்).
(6), 102 பக்கம், விலை: ரூபா 4., அளவு: 21.5×14 சமீ.
அலெக்சாந்தர் டூமாசின் மொன்ரே கிறிஸ்ரோ என்னும் ஆங்கில மூல நாவலின் தமிழாக்கம். ஓய்வுபெற்ற ஆசிரியர் வி.பி.மரியாம்பிள்ளையின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. நீ ஒரு கைதி, தீர்ப்பு, தீவில் சிறை, இலக்கம் 34-இலக்கம் 27, புதையலின் புதினம், இடுகாடு, ஆபத்து நீங்கியது, புதையல் வேட்டை, வைரக்கல், நான் உன் விரோதி, வங்கி முதலாளி, அவன் கொலைகாரன், அடிமைப்பெண், சவால், சந்திப்பு, தற்கொலை, ஐம்பது லட்சம், கள்வர் கூட்டம், பசிதீர்க்கப் பணம், நீயின்றேல் நானில்லை ஆகிய20 அத்தியாயங்களில் இந்நாவல் சுவாரஸ்யமாக விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122970).