ரோபர்ட் லுயிஸ் ஸ்டீவன்சன் (மூலம்), தேவன் – யாழ்ப்பாணம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்;: நா.தெய்வேந்திரம், அதிபர், ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, 1957. 1வது பதிப்பு, 1949. (சென்னை 1: ஜோதி பிரின்டர்ஸ்).
160 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 17.5×12 சமீ.
Treasure Island என்ற தலைப்பில் ரோபர்ட் லுயிஸ் ஸ்டீவன்சன் (Robert Louis Stevenson) எழுதிய ஆங்கிலமூலமான நாவலின் மொழிபெயர்ப்பு. இ.மகாதேவா (தேவன் யாழ்ப்பாணம்) அவர்கள், தமிழகத்தில் திருவனந்தபுரம் சுதர்சன் பிரசுராலயத்தில் 1949இல் வெளியிட்ட நூலின் மறுபதிப்பு இதுவாகும். கதாபாத்திரங்கள் ஆங்கில மூலத்தில் உள்ளவாறாகவன்றி தமிழ்ப்பெயரோடு மீகாமன், கறுப்பண்ணன் என்றவாறாக இடப்பட்டுள்ளன. தேவன்-யாழ்ப்பாணம் தனது 19ஆவது வயதில் இவ்வாங்கில நாவலை தமிழில் மொழிபெயர்த்ததாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ரோபர்ட் லுயீஸ் ஸ்டீவன்சன் 1850இல் ஸ்கொட்லாந்தில் பிறந்தவர். அவர் 44 வருட காலமே (1894) உயிர்வாழ்ந்தவர். இளவயது முதலே நோய்வாய்ப்பட்ட அவர் தாதியின் பராமரிப்பிலேயே வாழ்நாளைக்கழித்த போதும், வாழ்வின் பெரும்பங்கை கடற் பிரயாணங்களிலும் கழித்தவர். அதற்கிடையில் அவர் எழுதிய கதைகள் சாகாவரம் பெற்றவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40982).