8788 மக்களின் மனிதன்.

சீநு ஆச்சுபே (Chinua Achebe) (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

232 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89748-91-3.

Things Fall Apart, Arrows of God ஆகிய பிரபல்யமான நாவல்களின் ஆசிரியர் நைஜீரியாவின் இபோ இனத்தவரான சீநு ஆச்சுபே. அங்கு நடைபெற்ற முதலாவது இராணுவப் புரட்சியின் பின்னர் வெளிவந்த மக்களின் மனிதன் என்ற இந்த நாவல் நைஜீரிய மக்களிடையே ஒரு பரபரப்பினை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகளின் ஊழல்களை மிக நுட்பமாக இந்நாவல் நையாண்டி செய்கிறது. நைஜீரியாவிலிருந்து இபோ இன மக்களைக்கொண்ட பைஃபிரா நாடு 1967இல் தனியாகப் பிரிந்தது. உள்நாட்டுப்போர் நடந்தவேளை அவர் தாம் சார்ந்த இபோ இன மக்களின் தனித்துவ தேசியத்திற்கான ஆதரவாளராகச் செயற்பட்டார். இதன்மூலம் தனது இனத்தின் தனித்துவ அடையாளங்களிலே ஊன்றிய அக்கறையை  வெளிப்படுத்தினார். ஆனால் அரசியல் கட்சிகளிலே நிலவிய ஊழலினால் அவர் விரக்தி அடையநேர்ந்தது. அந்தவேளையில் ஆசிரியர் எழுதிய இந்நாவல் ஆபிரிக்க இலக்கியத்துக்குக் கிடைத்த ஆதாயமாகும். தடம்பதித்த ஆபிரிக்க இலக்கியப் படைப்புகள் தொடரில்  வெளிவரும் இரண்டாவது நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

Fruit Million Linhas Criancice Apostas

Content Spin Palace Internet do cassino – RTP aquele Volatilidade Aquele abichar sobre capaz nas slots Arruíi aquele maduro demanda-níqueis online como por aquele jogá-los?

11459 முகாமைத்துவ நடைமுறைகள்.

அருணாசலம் இரவீந்திரன். மட்டக்களப்பு: திருமதி சுசீலாதேவி இரவீந்திரன், 35/3, சின்ன உப்போடை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2013. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). vi, 138 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400.,