க.நாகேஸ்வரி (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: திருமதி க.நாகேஸ்வரி, Hassel Riede-9, Bissendorf, 30900-Wede Mark, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (கொழும்பு: லட்சுமி அச்சகம்).
(8), 289 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
இடைக்காடு இந்துநெறிக் கழகம், கொழும்பு-லட்சுமி அச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் வெளியிடப்பட்ட இலவசப் பிரசுரம். தென் கேரளத்தின் பறயகடவு என்ற மீனவக்கிராமத்தில் மீன் வியாபாரியாகவிருந்த கிருஷ்ண பக்தரான சுகணானந்தருக்கும், தமயந்திக்கும் 27.9.1953இல் பிறந்தவர் சுதாமணி. பின்னாளில் உலகளாவிய ரீதியில் 199 நாடுகளிலே சீடர்களைக் கொண்டவராக தீவிர ஆன்மீக பக்தர்களை உள்வாங்கி- அம்மா என்றழைக்கப்படும் ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயிதேவி அம்மா எனப் போற்றப்படுபவர். ஆதரவுடன் கட்டி அணைப்பதினாலெயே பலரது மனச்சுமைகளைப் போக்குபவர் என்ற பெருமைமிக்க அம்மாவின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் விரிகின்றது.அம்மாவின் தீவிர பக்தையான நூலாசிரியர் ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்.