8818 சிவத்தமிழ்ச் செல்வி வாசகம்.

சிவத்தமிழ்ச் செல்வி மலர் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுன் 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).

344 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட இம்மலரில்  வாழ்த்துரைகள், அம்மையார் பற்றிய அறிஞர்தம் நினைவுரைகள் ஆகியவற்றுடன் பெண்மைக்கு இணையுண்டோ என்ற நூலில் இடம்பெற்ற சிவத்தமிழ்ச் செல்வியின் கட்டுரைகள் மீள்பிரசுரமாகியுள்ளன.  மேலும் அன்னையின் நினைவுதின உரைகளாக வெளிவந்த பின்வரும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.  ஈழத்துத் தமிழ்ப் புலமை மரபில் முதல் தமிழ்ப் பெண்புலவர் (அ.சண்முகதாஸ்), சைவத்தமிழ்ப் பண்பாட்டிற் பெண்மையின் செல்நெறி (மனோன்மணி சண்முகதாஸ்), சைவப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் யாழ்ப்பாண மகளிரின் பங்கும் பணியும் (கலைவாணி இராமநாதன்), லேடி லீலாவதி இராமநாதன் பெருமாட்டி (அன்பரசி இரத்தினசிங்கம்),  யாழ் குடாநாட்டில் முன்பள்ளிகளின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு (இ.பொன்மலர்), இலங்கையிற் பரதம் வளர்த்த பாவையர் 1950-1970 (சாந்தினி சிவநேசன்), யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரக் கலையைப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தியவர்  திருமதி கோபால் முத்துலட்சுமி (சாந்தினி அருளானந்தம்), மனித விழுமியங்களும் பெண்களின் பங்கும் (சண்முகயோகினி ரவீந்திரன்), இலங்கையின் சமய சமூக வளர்ச்சியில் முன்னோடிகளான சில இந்துப் பெண்கள் (விக்னேஸ்வரி பவநேசன்), ஈழத்தின் ஆத்மீக வளர்ச்சியில் பெண்களின் பங்கு (இராஜேஸ்வரி சண்முகராஜா), திருக்கோணமலை ஈன்றெடுத்த முதல் பெண்துறவி எங்கள் மாதாஜி (கந்தையா இராசநாயகி), போர்க்காலச் சூழலில் இலங்கையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (சுபாஜினி உதயராசா), இந்து சமயத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் தாய்மைத் தத்துவமும் (சிவ. மகாலிங்கம்), யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையில் பெண்களின் பங்களிப்பு (கிரஹாசினி கருணாநிதி), வித்தகபுரம் தந்த வித்தகியின் வெற்றிகளுக்கான வித்துக்கள்: ஒரு நோக்கு (வானதி காண்டீபன்), ஈழத்துச் சிறுகதைப் பெண் படைப்பாளிகள் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), யாழ்ப்பாணக் கலை, கைவினை வளர்ச்சிக்குப் பெண்கள் இருவரின் பங்களிப்பு (ஏ.என்.கிருஷ்ணவேணி), பத்திரிகைத்துறையில் பெண்கள் (பத்மா சோமகாந்தன்), ஈழத்துத் தமிழ்ப் பிரசங்க மரபில் பெண் ஆளுமை (ச.லலீசன்), Loss of Great Spiritual Leader Let us Follow Her Path (Kandaiah Neelakandan), The contributions of the Female Members of the American Mission in Educating the Females in Jaffna during British Period (Shanthy Vicknarajah) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Demonstration Für nüsse

Content Gewinnlinien Und Absolutwert Aufhören Was Zeichnet Ramses Book Verbunden Leer? Vortragen Diese Book Of Ra Magic Qua Kasino Provision Book Of Ra 6 Deluxe

15173 இந்தியாவும் தமிழ் மக்களும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: ரூபா 20.00,