மு.அருணாசலம். யாழ்ப்பாணம்: மு.அருணாசலம், திருவடி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213 காங்கேசன்துறை வீதி).
(4), 367 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
சிவயோக சுவாமிகளால் திருவாய் மலர்ந்தருளப்பெற்ற நற்சிந்தனையெனும் நல்லமுதத்தை மேற்கோள் காட்டி சைவசித்தாந்தக் கருத்தினைத் தழுவி யோகசுவாமிகளின் சரிதத்தை ஆசிரியர் தெய்வீக மணம்கமழ இந்நூலில் வழங்கியுள்ளார். அருட்சக்தியின்பெருமை, திருவைந்தெழுத்தின் சிறப்பு, சித்தாந்த நன்நெறித் தத்துவங்கள், புராணங்களில் காணப்படும் வாழ்க்கை நெறிகள், சிவத்தொண்டின் மாட்சிமை, திருமுறைகள் காட்டும் வாழ்வியல் கொள்கைகள் முதலாய பல விடயங்களை இந்நூல் தெளிவுபடுத்துகின்றது. இந்நூல் ஏழு இயல்களாக வகுக்கப்பட்டுள்ளது. அவை கணேசர் தோத்திரம் (அப்பர் தாண்டகம் பாடினார், தூண்டுகோள் உரையும் வரலாறும்), பிறந்த திகதி (ஐந்தாண்டு விழா, அற்புதங்கள்), நற்சிந்தனை உருவாகிறது (ஆறு முகங்கள், தேவார திருவாசகமுதாயம், சோதியில் ஆழ்ந்த பின்னரே பதிகங்கள் பாடியுள்ளார், நற்சிந்தனை உருவாகிறது), வரலாறு (குருதீட்சை), சுழுமுனா நாடி திறத்தல், ஐந்தாண்டு விழா (இரண்டாவதாக அம்மை அப்பர் தரிசனம், நிர்விகல்ப சமாதி), ஓங்கார மேடையில் பயிற்சி (கதிர்காம யாத்திரை), யாழ்ப்பாணக் கோயில் கொண்டெழுதல் (கொட்டிலும் செல்லப்பாச் சாமியாரும், மகாசமாதி கொண்ட சேவை) ஆகிய இயல்களில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 99139).