8833 தமிழ் மறுமலர்ச்சியாளர் சி.வை.தாமோதரம்பிள்ளை: தமிழ்த் தேசியத்தின் மூலவேர்.

எஸ்.இரட்ணஜீவன் எச்.ஹூல். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

87 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-360-0.

தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் ஒருவரான சி.வை தாமோதரம்பிள்ளை என்னும் மனிதரை  தமிழ் இந்து தேசியவாதம் என்னும் சட்டகத்துக்கு வெளியே வைத்து இந்நூல் ஆராய்கின்றது.  ஒரு கிறிஸ்தவராகப் பிறந்த சார்ள்ஸ் வின்ஸ்லோ கிங்ஸ்பெரி என்ற சி.டபிள்யூ தாமோதரம்பிள்ளை தன்னுடைய பிற்காலத்தில் சைவத்தில் அதீத நம்பிக்கை வைத்து கிறிஸ்தவத்துக்கு எதிரான ஒரு தீவிர இந்துவாக மாறினார். இதன் பயனாய் இயல்பாகவே அவர் இந்து தேசியவாதத்தால் பிறப்பால் இந்துவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு ஏற்ப அவரின் வரலாறு மீள எழுதப்பட்டது. இதை நிவர்த்திசெய்யும் வகையில் தாமோதரம்பிள்ளை குடும்பத்தின் உறுப்பினர் என்ற வகையில் இந்நூலாசிரியர் தனது குடும்ப இலக்கிய சேகரிப்பிலிருந்தும் தேவாலய ஆவணங்களிலிருந்தும் இதுகாலவரை வெளிப்படுத்தப்படாதிருந்த இலக்கியத் திரட்டையும் மாற்றுப்பார்வையையும் கொண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் வரலாற்றை மீள எழுதியுள்ளார். அறிமுகம், தாமோதரம்பிள்ளை: அவருடைய வாழ்க்கை, அவருடைய பணிகள், பொறாமை, அவரது மகன்: பிரான்சிஸ் கிங்ஸ்பெரி, தனிப்பட்ட பார்வை, தமிழ்-இந்து தேசியவாதப் பிரச்சாரம், நாவலரின் ஆக்கங்களுடன் தொடர்பபடுத்திய ஒரு மதிப்பீடு, முடிவுரை, உசாத்துணை ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வு நூலுருக்கண்டுள்ளது. சாமுவேல் இரட்ணஜீவன் ஹேபேட் ஹூல் (1952), யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கைப் பல்கலைக்கழக, கட்டுபெத்தை வளாகத்தின் இளம் கலைமாணிப் பட்டத்தையும், கானகி மெலன் (Carnegie Mellon) பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் D.Sc உயர் கலாநிதிப் பட்டத்தையும் மின்பொறியியல்துறையில் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Golden Sevens Darmowa Gra Hazardowa

Content Gry Podobnej treści Do Śródziemie: Ślad Mordoru | poważne połączenie Tetri Maniactwo Detale Zabawy Darmowe Spiny Zalety Z Postępowania Mexico City Oryginalne Łowisko Przy

14320 நீதிமுரசு 2000.

ஐ.பயஸ் றெஸ்ஸாக் (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (கொழும்பு 6: பரணன் அசோஷியேட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 403, 1/1

Estratégias para Blackjack

Content Outros Atividade da Leon Bet: Casino Mega Don Odds na Betseven 📌 Posso assistir acrescentar live streaming enquanto faço apostas na Leon Bet? Best

Tragaperras Para Líneas

Content Relación De todas ellas Los Tragaperras Netent | Bier Haus casinos Competir Referente a Tragaperras Recursos Conveniente Vs Sin cargo Divertirte Con el pasar