தி.இரா.கோபாலன் (தொகுப்பாசிரியர்), க.சத்தியேந்திரன் (உதவி). ஹட்டன்: வெ.கந்தையா குடும்பத்தினர், 41 நர்ஸிங் ஹோம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர்).
xvi, 160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
மூத்த தொழிற்சங்கவாதியாக விளங்கியவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவருமான அமரர் வெள்ளசாமி கந்தையாவின் (1933-2005) வாழ்க்கைப் பயணத்தை எடுத்துரைக்கும் நூல். தெல்தோட்ட- ஸ்க்லாவத்தை தோட்டத்தில் 1933இல் பிறந்த கந்தையா தோட்டப் பாடசாலையிலும், கலஹா பாடசாலையிலும் கல்வி பயின்றவர். 1954-64 காலகட்டங்களில் கலஹா, நாவலப்பிட்டி, அட்டன், மாத்தளை, நுவரஎலிய, டிக்கோயா பிரதேசங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பணிமனைகளில் பணியாற்றியவர். 1964இல் திருமணம் முடித்தபின்னர் 1965-67 காலப்பகுதியில்அட்டன், மஸ்கெலிய NUW மாநிலப்பிரதிநிதியாகச் செயற்பட்டவர். 1968முதல் அட்டன் மஸ்கெலியா, பொகவந்தலாவ பகுதிகளில் NUW தொழிலுறவுச் செயலாளராகவும் பின்னர் 1973-2001 காலப்பகுதியில் NUW பொதுச் செயலாளராகவும், 2001-02 காலப்பகுதியில் அதன் நிதிச் செயலாளராகவும் பணியாற்றியவர். 2002இல் NUW தலைவராகப் பொறுப்பேற்று 2005இல் சுகவீனம் காரணமாக மரணமெய்தும் வரையில் அப்பதவியை வகித்தவர்.