ஏ.எம்.நஹியா. கொழும்பு: யா/கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கொழும்புக் கிளை, 16 இன்னர் பெயார்லைன் வீதி, தெகிவளை, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு 6: ஆர்.எஸ்.டி. என்ரர்பிரைஸஸ், இல.114, டபிள்யு ஏ சில்வா மாவத்தை).
(4), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் உதவி அதிபர் பதவியை வகித்த ஏ.எம்.நஹியா, தமிழ் விவகார உதவிப் பணிப்பாளராகவிருந்து அளப்பெரும் தமிழ்ப்பணியாற்றியவர். இலங்கைக் கலைக்கழகத்தின் உறுப்பினர். புனர்வாழ்வு த்துறையின் பணிப்பாளர் நாயகமாகவும், மீனவர் வீடமைப்புத்துறையின் பணிப்பாளர் நாயகமாகவும், நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் சிரேஷ்ட மதியுரைஞனாகவும் முக்கிய அரச பணிகளை மேற்கொண்டவர். இலக்கிய ஆய்வுகளையும், கட்டுரைகளையும் வழங்கிவந்த தமிழறிஞரான இவர், பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் நெருங்கிய உறவினைப் பேணியவர். பேராசிரியரின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றவர்களுள் ஒருவர். இவரது பார்வையில் பேராசிரியரின் வாழ்வும் பணிகளும் இந்நூலில் விரிகின்றன. கரவெட்டி விக்கினேஸ்வரா கலலூரியின் நினைவுப் பேருரை இதுவாகும்.