நா.சிவபாதசுந்தரனார். தெல்லிப்பழை: தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி விடுதி மாணவர் மன்றம், 1வது பதிப்பு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1978. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணத்தில் பிரபல சவர்க்காரத் தொழிலகத்தை 1927இல் தொடக்கிவைத்தவர் வீ.மு.கந்தையா. அவரது மகனான கந்தையா கனகராசா பின்னர் அத்தொழிலகத்தைப் பொறுப்பெற்று நடத்தினார். கனகராசா தொழிலதிபராக மாத்திரம் நின்றுவிடாது பல்வெறு சமூகப்பணிகளிலும் தம்மை ஈடுபடத்திக்கொண்டார். ஏராளமான நூல்களை வெளியிட்டு அதனூடாக மில்க்வைற் சவர்க்காரத்திற்கான விளம்பரத்தையும் தேடிக்கொண்டார். இவரது சமூகப்பணிகளுள் ஒன்றாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் வெள்ளிவிழா நினைவு மண்டபத்தினையும் கட்டிக்கொடுத்தார். அம்மண்டபத்தின் திறப்புவிழாவையொட்டி 09.02.1978 அன்று வெளியிடப்பெற்ற மகாஜனன் வெள்ளிவிழா மலரில் இடம்பெற்றிருந்த விரிவான கட்டுரையொன்றின் தனிநூலுரு இதுவாகும். இக்கட்டுரையை புலவர் நா.சிவபாதசுந்தரனார் எழுதியிருந்தார்.