குமாரி ஜயவர்த்தனா (ஆங்கில மூலம்), மௌ.சித்திரலேகா, மு.நித்தியானந்தன், செ.கணேசலிங்கன், க.குமரன் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 3வது (திருத்திய) பதிப்பு, 2011, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987, 2வது பதிப்பு, மார்ச் 1995. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 152 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-285-6.
இந்நூல் சிங்கள பௌத்த உணர்வுநிலையின் கடந்த 100 ஆண்டுகால (1883-1983) வரலாற்றை அரசியல், பொருளாதார, சமூக விஞ்ஞானரீதியில் ஆராய்கின்றது. இவ்வுணர்வு நிலை 1883இன் கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம், 1915இன் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைக் கலவரம், 1930களில் மலையாளிகளை நாட்டைவிட்டு விரட்டுதல் ஆகியவற்றொடு நின்றுவிடவில்லை. 1948இல் மலையகத் தமிழரை நாடற்றவராக்கியபின் 1956இல் இலங்கைத் தமிழருக்கெதிராக ஆரம்பித்த இனக்கலவரம், தொடர்ந்து இடையிடையே வன்முறை வடிவமெடுத்து, 1983இல் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. சிங்கள பௌத்தரின் இவ்வரலாறு ஆதாரங்களுடன் இந்நூலில்அலசப்படுகின்றது. இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள், கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம், தொழிலாளர் வர்க்கத்தினரிடையே இன ஒற்றுமை (1890-1930), வர்க்க, இன உணர்வுகளும் மலையாளத் தொழிலாளர்களும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் உரிமைகள் (1920-1948), சிங்களம் மட்டும் சட்டத்திலிருந்து இனக்கலவரத்தை நோக்கி, மார்க்ஸிஸத்தில் இருந்து மேலாதிக்க வெறியை நோக்கி, மக்கள் விடுதலை முன்னணியும் இனப்பிரச்சினையும், 1970களில் சிங்கள பௌத்தக் கருத்தியலில் மேலாண்மை, இன உணர்வின் தொடர்ந்த நீடிப்பு ஆகிய 11 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது. குமாரி ஜயவர்த்தன லண்டன் பொருளியல் கல்லூரியில் கலாநிதிப்பட்டத்தைப் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில்இணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். பெண்ணிய இயக்கம், மனித உரிமைகள் இயக்கம் ஆகியவற்றில்இணைந்து நீண்டகாலம் உழைத்துவரும் சமூகச் செயற்பாட்டாளர்.