வே.பிரபாகரன் (மூலம்), கோ.இளவழகன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: கதிர்மதி பதிப்பகம், பி.11, முதல் தளம், குல்மெகர் அடுக்ககம், 35, தெற்கு போக்கு சாலை, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
198 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ.
1984 முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் சண்டே (இந்தியா), புரொன்ட் லைன், வெளிச்சம், களத்தில், சண்டே டைம்ஸ், நியூஸ் வீக், வீக் (இந்தியா), பீ.பீ.சீ. ஆகியவை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கும் வழங்கிய நேர்காணல்களினதும், கலந்துரையாடல்களினதும் தொகுப்பு இதுவாகும். அனிதா பிரதாப், பி.இராமநாதன், சுதிப் மசும்தார், என்.ராம், பகவான் ஆர் சிங், ஜஸ்விந்தர் சிங், கெண்டல் கோப்மன், கிரிஸ் மொரிஸ், ஆனந்தி சூரியப்பிரகாசம் ஆகிய ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பிரபாகரன் வழங்கிய பதில்களினூடாக இந்நூலில் விடுதலைப் போராட்டத்தின் நோக்கம், வழிமுறை, கொள்கை வகுத்தல் மற்றும் கட்டமைப்பு பற்றி தலைமைத்துவத்தின் பார்வையில் பேசப்படுகின்றன.