8918 யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்.

சாந்தசீலன் கதிர்காமர்.  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxii, 161 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-316-7.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (1924-1934) பற்றிய இந்த வரலாறானது, 1980இல் வெளியிடப்பட்ட ஹண்டி பேரின்பநாயகத்தின் ஞாபகார்த்த நூலின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருந்த ஆங்கில மூலத்தின் தமிழாக்கமாகும். இந்நூல் சிங்களத்திலும்  சமகாலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் 1924இல் தாபிக்கப்பட்டது. சீலன் அவர்கள் அதன் தொடக்ககால அமர்வுகள், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் நோக்கங்கள் மற்றும் செயல் அட்டவணைகள், காந்தியின் வருகை, சாதி மற்றும் இனத்துவ ஒற்றுமை பற்றிய பிரச்சினைகள், 1931இல் இடம்பெற்ற தேர்தலை யாழ்ப்பாணம் பகிஷ்கரித்தமை,  அதைத் தொடர்ந்து வந்த வாதப் பிரதிவாதங்கள்,  வேண்டுமென்றே உண்மையாக நடந்தவை சிதைக்கப்பட்ட முறை ஆகியன பற்றி விளக்கிச் செல்கின்றார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் எமக்கு விட்டுச்சென்றவை எவை என்பதுபற்றி மதிப்பீடு செய்கையில்,  அதனுடைய சாதனையானது, பண்பாடு மற்றும் கல்வித் துறைகளில் சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றியதிலும் உயர்ந்து நிற்கின்றது. அத்தோடு எந்தத் தேசமும் பெருமைப்படக்கூடிய விதத்தில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசில் இருந்தே மேன்மை மிக்க ஆசிரியர்கள், அதிபர்கள், ஆட்சி நிர்வாகிகள்,  பாடசாலைகளை நிறுவியோர் என்று ஒரு பரம்பரையினரே வெளிவந்திருக்கின்றனர். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் பார்வைப் பரப்பானது முழுத்தீவையும் அடக்கியது. அதன் இலக்கு சுதந்திரம், தேசிய ஐக்கியம், மதச்சார்பின்மை, மற்றும் சாதித் தடைகள் அனைத்தையும் கடத்தல் என்பனவாயிருந்தது. நாட்டில் உண்மையான தேசியத்தின் வெளிப்பாடாக அவ்விலக்கு அமைந்திருந்தது. ஆசிரியர் சீலன் கதிர்காமர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கலைமாணிப்பட்டப் படிப்புப் பிரிவின் விரிவுரையாளராகவும், பின்னர் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் நவீன வரலாறு, சர்வதேச அரசியல் ஆகிய துறைகளில் விரிவுரையாளராகவும் இருந்தவர்.

ஏனைய பதிவுகள்

Jackpot City Casino 40 Giros De Bônus

Content Méthodes De Paiement Disponibles Au Jackpot City Casino Payment Methods At Jackpotcity Casino ¿es Animado Jugar En El Casino Jackpotcity? Métodos Infantilidade Armazém Os