முத்துகிருஷ்ணா சர்வானந்தன் (ஆங்கில மூலம்), செல்வராஜா கார்த்திகேயன் (தமிழாக்கம்). பருத்தித்துறை: அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகம், மாணிக்க வாசா, தம்பசெட்டி, புலோலி மேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2006. (கொழும்பு 6: மோகனின் அச்சாக்க சேவை, 114, டபிள்யு ஏ டி சில்வா மாவத்தை, வெள்ளவத்தை).
xx, 173 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ. ISBN: 978-955-1086-11-4.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பொருளாதாரப் பாதிப்புகளைப்பற்றியதும் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திச் செயற்றிட்டம் பற்றியதுமான ஆய்வு. அறிமுகம் (நோக்கம், குறிக்கோள், வரையறைகள், ஒழுங்கமைப்பு, ஆய்வுச்செயற்பாடும் முறைமையும், கால அளவு), பேரினப் பொருளாதாரப் பார்வை (அறிமுகம், விவசாயம், கால்நடை, மீன்பிடி, கைத்தொழில், பொருளாதார உட்கட்டமைப்பு, முடிவுரை), நிலைமை பகுப்பாய்வு (அறிமுகம், யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், வட மாகாணத்தின் கனிப்பொருள் வளம், முடிவுரை), தொழிலுக்கான கேள்வி (அறிமுகம், மாதிரி அளவு, வயது அடிப்படையில் பதிலளிப்பவர்கள், பார்வைக் குழுவின் அபிலாஷைகள், விருப்பத்துக்குரிய உயர்கல்விப்பிரிவு, வேண்டப்படும் தொழிலின் துறையும் வகையும், விருப்பத்துக்குரிய திறன் பயிற்சிகள், வேண்டப்படும் தொழில் வகையும் இடமும்), தொழிலுக்கான நிரம்பல் (மாதிரி அளவு, வேலையாட்களின் எண்ணிக்கை, தற்போதைய வேலையாட்களின் வயதுக்குழு, தற்போதைய வேலையாட்களின் வகை, வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான விருப்பம், எதிர்பார்க்கப்பட்ட தொழில் உருவாக்கம், வயதுக்குழு அடிப்படையில் புதிய தொழில் வாய்ப்புகள், புதிய தொழில் வாய்ப்பகளின் வகைகள். எதிர்பார்க்கப்பட்ட தொழில்சார் பயிற்சிகளின் எண்ணிக்கை, திறன் இன்மை, புதிய வர்த்தகம் ஆரம்பித்தல், பணியாளர் தொகையை அதிகரிப்பதற்கான இயலுமை), முடிவுகளும் சிபாரிசுகளும் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக உள்ளுர் மூலதனப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய புதிய வர்த்தகங்கள், உள்ளுரில் கிடைக்கக்கூடிய தொழில்சார் பயிற்சிகளும் அனுபவங்களும், 14 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட சிறுவர் குழுவினருக்கு உள்ளுரில் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புக்கள் ஆகிய மூன்று ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48305).