கரிகாலன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் செக்டர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
110 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 18×12 சமீ., ISBN: 978-93-80369-23-5.
எங்கள் கடல் செந்நீராகிறது, தெருவெல்லாம் சுடகாடாய், சமயோசிதம், ஓயாத கால்கள், இது ஒரு தொடர்கதை, அப்பா இன்னும் இருக்கின்றார், பிரிவு, காவல், சாகாத பிணங்கள், வெறுப்புக் கோலங்கள், நிதானம், நீ புலிதான், உணர்வு, பாடம், வில்லுக்குளத்துப் பறவை, துணை, குடிசைகளின் உயிர்நரம்பை அறுத்தவர்கள் ஆகிய 17 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் ஈழப்படைப்பாளிகளால் எழுதப்பட்ட ஈழப் போராட்டம், போர்க்கால வாழ்வியல் சார்ந்த கதைகள்.