ப.சசிகலா. சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
232 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-93-81322-03-1.
எஸ்.பொவின் கதைக்களப் பின்னணிகள், எஸ்.பொவின் சிறுகதைகள் காட்டும் சமுதாயம், எஸ்.பொவின் சிறுகதைகளில் மனித உறவுகள், எஸ்.பொவின் சிறுகதைகளில் பாலுறவுகள், எஸ்.பொவின் சிறுகதைகளில் மொழிநடையும் உத்திகளும் ,முடிவுரை ஆகிய ஆறு இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூலாசிரியர் முனைவர் ப.சசிகலா, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்றவர். மதுரை தியாகராயர் கல்லூரியில் நிறைஞர் பட்டமும், ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 1994 முதல் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.