இரா.செல்வக்கணபதி. சென்னை 600090: தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, 3வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 2005, 2வது பதிப்பு, 2010. (சென்னை 26: தி பிரின்ட் விஷன்ஸ், 203 ஆற்காடு சாலை, வடபழனி).
232 பக்கம், வண்ணப்படங்கள், விலை: இந்திய ரூபா 500.00, அளவு: 25×18 சமீ.
முனைவர் இரா.செல்வகணபதி 2005இல் எழுதிவெளியிட்ட நூலின் மூன்றாவது பதிப்பு, சிவநெறித் தொண்டர் அமரர் கே.கே.சுப்பிரமணியம் அவர்களின் மறைவின் முதலாம் ஆண்டு நினைவாக 11.12.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் பதிப்பில் முன்னைய பதிப்பிற் காணப்பட்ட சைவமும் தமிழும், திருமுறைத் தமிழ், சைவத் தமிழ் இலக்கியங்கள், புராணத் தமிழ் இலக்கியங்கள் ஆகிய பிரிவுகளுடன் மேலதிகமாக சைவ சித்தாந்தம் (அமரர் வச்சிரவேல் முதலியார்), சைவசமயம்-ஈழம் (கொழும்பு விவேகானந்த சபை) ஆகிய இரண்டு இயல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அமரர் கே.கே.சுப்பிரமணியம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் சிரேஷ்ட ஆணையாளர் நாயகமாக நாற்பதாண்டுகளும், இலங்கை முதலீட்டுச் சபையில் ஐந்தாண்டுகளும் பணியாற்றியவர்.