8981 தமிழ் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம்.

தக்கலை எம்.எஸ்.பஷீர். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி ஏழாவது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை: சிவம்ஸ்).

(4), 152 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 18×12.5 சமீ.

நூலாசிரியர் தமிழகத்தைச் சேர்ந்தவராயினும் அவரது கட்டுரைகளில் ஈழத்து இஸ்லாமிய அறிஞர்களின் குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. செ.கணேசலிங்கன், இளம்பிறை ரஹ்மான், கலாநிதி ம.மு.உவைஸ் போன்றோரின் பாதிப்பு இவரது இலக்கியப்பாதையில் ஆங்காங்கே பதியமிடப்படுகின்றன. இந்நூலில் தமிழ் இலக்கியத்தில் இஸ்லாத்தின் தாக்கம், ஞான ஆனந்தக் களிப்பு: சித்தரும் சூபியரும், அகத்தியர்-வைத்தியப்பிள்ளைத் தமிழ் உரை, செய்தக்காதி நொண்டி நாடகம்-ஓராய்வு, சித்திரம் கவிகள், அகராதிகளும் இலக்கணமும், அரபு-அரபுத்தமிழ் அகராதிகள், திருக்குர் ஆன் இலக்கியங்கள், 1950க்குப் பின் இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள், பல்கீஸ் நாச்சியார் காவியம், தமிழில் உருவகக் கதை, ஓர் இலக்கிய இலக்கண முன்னோடி, 1001 இரவுகள் அரபுக்கதைகள்-அல்ஃபுலைலா வலைலா,  சறுசறு படைப்போர்- ஒரு குறுகிய ஆய்வு, மிஃராஜ் வளம், மெஞ்ஞானச் சதகம் ஆகிய தலைப்புகளில்; இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.  (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 590784).

ஏனைய பதிவுகள்

1 Minimum Deposit Casino Nz

Content Casino Zodiac login | Deposit 1: Simple Steps To Start Gambling Online 100 No Deposit Bonus In addition, Casinosfest.com is dedicated to supporting safe,

13743 27,யாழ்தேவி (சிறுகதைகள்).

ஈழவாணி. சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல.2, 2ஆவது தளம், 1ஆவது குறுக்குத் தெரு, புஷ்பா காலனி, சாலிகிராமம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600093: பூவரசி வெளியீடு, புஷ்பா காலனி, சாலிகிராமம்).

Starburst Pharaoh slot Gokkas Review

Volume Watje Bedragen Starburst? Voor Kennismaken In Een Gokkas Van Netent Speel Starburst Erbij: Film Gokkasten De spelle, zowel welnu offlin videoslots, bedragen noppes meertje